ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் தட்டுப்பாடின்றி சீராக விநியோகம் செய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துயுள்ளார். தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் ஜூன் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருள்கள் விநியோகிக்கப்படவில்லை என்ற செய்தி கவலையளிப்பதாக
தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பொது விநியோகத்தில் நாட்டிற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்த தமிழ்நாட்டின் ரேஷன் கடைகளில், பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு சீர்கேட்டை செய்த திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.