சுற்றி வளைத்த ED... சுத்தலில் விட்ட வைத்திலிங்கம்... ரெய்டுக்கு நடுவே கூலாக சொன்ன வார்த்தை...

Update: 2024-10-23 11:57 GMT

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர்.

அடுக்குமாடி குடியிருப்பு அனுமதி அளித்த விவகாரத்தில் தனியார் நிறுவனத்திடம் இருந்து சுமார் 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றது தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்நிலையில்,

சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை, தஞ்சை உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் வைத்திலிங்கம், அவர் தொடர்புடைய இடங்கள் மற்றும் தனியார் கட்டுமான நிறுவனம், அது தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

வைத்திலிங்கம் தங்கிய சேப்பாக்கம் சட்டமன்ற விடுதி, கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் தலைமை பைனான்ஸ் அதிகாரி வீடு, தியாகராய நகரில் உள்ள ஸ்ரீராம் சிட் அலுவலகம், கொரட்டூர், அண்ணா நகர், அசோக் நகரில் உள்ள ஆடிட்டர் வீடு, திருவேற்காட்டில் உள்ள ஸ்ரீராம் கன்ஸ்ட்ரக்ஷன் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான வீடு, கொரட்டூரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது. ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்