திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர், விண்ணப்பம் பெறுவதற்கான தேதி குறித்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர், பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மார்ச் ஒன்று முதல், மார்ச் ஏழாம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என்றும்,
மார்ச் ஏழாம் தேதி மாலை 6 மணிக்குள் அண்ணா அறிவாலயத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
வேட்பாளருக்கான விண்ணப்ப கட்டணம் 50 ஆயிரம் ரூபாய் என குறிப்பிட்டுள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்,
இரண்டாயிரம் ரூபாயை செலுத்தி விண்ணப்ப படிவத்தை அண்ணா அறிவாலயத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார்.
"பிப்.19 முதல் அண்ணா அறிவாலயத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்"
"விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மார்ச் 1 முதல், மார்ச் 7ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம்"
"மார்ச் 7ம் தேதி மாலை 6 மணிக்குள் அண்ணா அறிவாலயத்தில் சமர்ப்பிக்க வேண்டும்"
"வேட்பாளருக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.50,000"
விண்ணப்ப படிவத்தை ரூ.2000 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு