மத்திய அரசின் திட்டங்களை திமுகவும் அதிமுகவும் தடுத்து தாமதப்படுத்துவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் 'என் மண் என் மக்கள்' யாத்திரை தெருமுனைக் கூட்டமாக நடைப்பெற்றது. இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொண்டர்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை, மத்திய அரசின் திட்டங்களுக்கு பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசு பெயர் மாற்றியுள்ளதாகக் கூறினார்.