திமுகவை விட்டு கொடுக்காமல் பேசிய ராஜன் செல்லப்பா

Update: 2024-10-04 07:48 GMT

தமிழகத்தில் அதிமுக, திமுகவை தவிர மற்ற கட்சிகள் சிறிய கட்சிகளே, எங்கள் தோளில் ஏறி சவாரி செய்யும் கட்சிகள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜன் செல்லப்பா கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பல கட்சிகள் வந்துள்ளன என்றும் புதிதாக கட்சிகள் வரவால் சில வாக்குகள் சிதறியுள்ளன என்றும் அதிமுகவின் 10 சதவீத வாக்குகள் குறையவில்லை என்றும் கூறினார். பல முறை திமுகவை தோற்கடித்துள்ளோம், 2026 தேர்தலிலும் திமுகவை வீழ்த்துவது கடினமல்ல என்றவர் அதிமுக ஒரு பீனிக்ஸ் பறவை தோல்விகளை கடந்து வெற்றியை ஈட்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்