சந்திரசேகர் ராவ் மகளுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு - சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், பாரத ராஷ்டிர சமிதி மூத்த தலைவர் கவிதாவின் நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பி.ஆர்.எஸ் கட்சியின் மூத்த தலைவர் கவிதாவை அமலாக்கதுறை, கடந்த மார்ச் 15-ஆம் தேதி கைது செய்தது. இந்த வழக்கில் அவரது நீதிமன்ற காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து கவிதா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மனுவை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா, ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார். சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குகளில் ஜாமின் கோரிய பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவர் கவிதா தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.