எதிரொலித்த விஷ சாராய சம்பவம்..மைக்கை பிடுங்கி மாறி மாறி பேசிய உறுப்பினர்கள் - கூட்டத்தில் பரபரப்பு
கடலூர் மாமன்ற கூட்டத்தில், விஷ சாராய சம்பவம் குறித்து பேசுவதற்காக பா.ம.க, அ.தி.மு.க கவுன்சிலர்கள் இடையே மைக்கை கைப்பற்றும் சண்டை ஏற்பட்டது. விஷ சாராய மரணங்களுக்கு தி.மு.க அரசே காரணம் என பா.ம.க மற்றும் அ.தி.மு.க கவுன்சிலர்கள் மாறி மாறி குற்றம்சாட்டினார்கள். விஷ சாராயம் விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசை கண்டிப்பதாக கூறி அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதற்கு பதிலளித்த மேயர் சுந்தரி ராஜா, பா.ஜ.க, அ.தி.மு.கவினருக்கு விஷ சாராய விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக கூறினார்.