மம்தா திடீர் முடிவு.. இந்தியா கூட்டணியில் விரிசலா? பாஜக கூட்டணிக்குள்ளும் குண்டு.. ஷாக்கில் மோடி
நிதி ஆயோக் கூட்டத்தை இந்தியா கூட்டணி முதல்வர்கள் புறக்கணித்துள்ள நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்க உள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக, இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதலமைச்சர்கள் அறிவித்துள்ளனர். அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ஆகியோர் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.
இதே போன்று, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் புறக்கணிக்க முடிவு செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் டெல்லி சென்றுள்ளார். மரியாதை நிமித்தமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலை சந்தித்து சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, நிதி ஆயோக்கால் எதையுமே செய்ய முடியாது என்றார். நிதி ஆயோக்கை நிறுத்திவிட்டு மீண்டும் திட்ட குழுவை கொண்டு வரவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.