"முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் வந்த திட்டங்கள்" - லிஸ்ட் போட்ட தமிழ் வளர்ச்சி துறை

Update: 2024-05-25 10:20 GMT

மாநில அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு உரிய அங்கீகாரம் வழங்கியதுடன்,3 ஆண்டுகளில் 260 தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது... 22 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதுடன், 6 அறிஞர்களுக்கு கனவு இல்லத் திட்டத்தின்கீழ் வீடுகள் வழங்கியது குறித்து பாராட்டப்பட்டுள்ளது. தமிழ் இருக்கைகள் நிறுவிடவும் தமிழ்ப்பணி ஆற்றிடவும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகப் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. 1330 குறட்பாக்களையும் முற்றோதல் செய்த 451 மாணவர்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப் பட்டதுடன், தமிழ்க்கூடல் திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது... தீராக் காதல் திருக்குறள் திட்டத்தின் மூலம் ஓவியப் போட்டி நடத்தப்பட்டதுடன், தமிழ் பரப்புரைக் கழகம் அமைக்கப்பட்டதாக பெருமிதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்க்க, பெரியார் நூல்களை மின்னூல் பதிப்புகளாக்க தலா 5 கோடி ரூபாய் வழங்கிட ஆணையிடப்பட்ட நிலையில், நடப்பாண்டில் அயலகத் தமிழர் மாநாடும் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக புகழாரம் சூட்டப்பட்டுள்ளது... கணியன் பூங்குன்றனார் நினைவுத்தூண் திறப்பு, திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், கிரேக்க பெருங் காப்பியங்களை தமிழில் மொழிபெயர்த்தது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது... அத்துடன், 2025-இல் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்படவுள்ளது முதல்வர் ஸ்டாலின் தமிழ் மீது கொண்டுள்ள தீராப்பற்றை உலகுக்கு பறைசாற்றுவதாக அமைந்துள்ளதென தமிழ் வளர்ச்சித் துறை பாராட்டியுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்