சலவை தொழிலாளர்கள் 272 குடும்பங்களுக்கு தீபாவளி பரிசாக வீடு வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 408 சதுர அடி பரப்பில் சகல வசதிகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். தொழில் செய்ய ஏதுவாக சலவை கற்களும் அங்கேயே பதிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.