இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட 16 பேருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், கிளாம்பாக்கத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பொதுப்போக்குவரத்து வசதிகளை ஒரே இடத்தில் நவீனமான முறையில் ஒருங்கிணைக்கும் கட்டமைப்பினை ஏற்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். உடனடியாக 300 முதல் 500 புதிய MTC பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னை மாநகர் மற்றும் புறநகர பகுதிகளுக்கு இயக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வெளியூரில் இருந்து வரும் பேருந்துகளுக்கும், மாநகர பேருந்துகளுக்கும் இடையே முழுமையான ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும் என்றும் தொடர்வண்டி மற்றும் மெட்ரோ இணைப்பு எளிதாகவும் உடனுக்குடனும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.