முதல்வரின் காலை உணவு திட்டம்...தமிழிசை சௌந்த‌ர‌ராஜன் கருத்து

Update: 2023-09-01 03:11 GMT

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை திட்டத்தை ஏற்காத தமிழக அரசு, காலை உணவு திட்டத்தை மட்டுமே அமல்படுத்தியுள்ளதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்த‌ர‌ராஜன் தெரிவித்துள்ளார். சென்னை திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் ஆதிபுரிஸ்வர் கோயிலில் பக்தர்களோடு பக்தர்களா வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செஸ் வீர‌ர் பிரக்ஞானந்தாவுக்கு புதுச்சேரி அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த உள்ளதாக தெரிவித்தார். காலை உணவுத் திட்டம் நல்லது என்ற தமிழிசை சௌந்த‌ர‌ராஜன், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு காணப்படுவதால் ஊட்டச்சத்து உணவு வழங்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்