ரூ.5.63 கோடியில் 731 பேருக்கு நலத்திட்ட - உதவி வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Update: 2024-02-07 02:32 GMT

சென்னையில் 731 பயனாளிகளுக்கு 5 கோடியே 63 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியில், திருமண உதவி திட்டங்களின் கீழ் 551 பேருக்கு 8 கிராம் தங்கம் மற்றும் நிதியுதவி, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 142 பேருக்கு புதிதாக வைப்புத் தொகை மற்றும் முதிர்வுத் தொகை, திருநங்கைகளுக்கு தொழில் தொடங்க 20 பேருக்கு மானியம், இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 18 பேருக்கு தையல் இயந்திரம் ஆகியவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்தியுள்ள திமுக அரசு, பெண்கள் முன்னேற்றத்திற்கு என்றென்றும் துணை நிற்கும் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்