மத்திய அரசுக்கு - திமுக எம் பி திடீர் வேண்டுகோள்

Update: 2024-07-24 16:52 GMT

பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்படாத வண்ணம் ரயில்வே வேலி அமைக்குமாறு மத்திய அரசுக்கு திமுக எம்பி செல்வ கணபதி வலியுறுத்தியிருக்கிறார். மாநிலங்களையில் பூஜ்ஜிய நேரத்தில் பேசியவர், சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் வழித்தடத்தில் வேலி அமைக்கப்படுவதால், விவசாயிகள் வாழ்வாதாரம் இழக்கிறார்கள், மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றார். மக்கள் மீது மனித தன்மையோடு நடந்துக்கொள்ள வேண்டும் என்றவர், மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் வகையில் இடைவெளியைவிட சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட மத்திய ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை விடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்