அமர் பிரசாத் ரெட்டியை துரத்தும் வழக்குகள்!"சென்னை டூ தென்காசிஅரசு பேருந்தில் அழைத்துச் சென்ற போலீஸ்

Update: 2023-11-03 06:18 GMT

பாஜக கொடிக்கம்பத்தை அகற்றும்போது, மாநகராட்சியின் ஜே.சி.பி. இயந்திரத்தை சேதப்படுத்தியதாக பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதேபோல், செஸ் ஒலிம்பியாட் விழா தொடர்பான விளம்பர வழக்கு, வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க. போராட்டம் தொடர்பான வழக்கு, தென்காசியில் பாதயாத்திரை நிகழ்ச்சியில் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்த வழக்கில், அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அமர்பிரசாத் ரெட்டியை போலீசார் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த உள்ளனர். இதற்காக புழல் சிறையில் இருந்து அமர் பிரசாத் ரெட்டியை ஆயுதப்படை போலீசார் அழைத்துச் சென்றனர். போலீஸ் வாகனத்திற்கு பதிலாக, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து அமர் பிரசாத் ரெட்டியை தென்காசி வரை அரசுப் பேருந்திலேயே போலீசார் அழைத்துச் சென்றனர்

Tags:    

மேலும் செய்திகள்