"வீட்டில் இருந்தே ஓட்டு போடலாம்?"-முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் ஆணையத்தின் புதிய நெறிமுறை

Update: 2023-11-27 06:24 GMT

தெலங்கானாவில், தேர்தல் அலுவலர்கள், வீடு வீடாகச் சென்று முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வாக்குகளைப் பதிவு செய்ய வைத்தனர். தெலங்கானாவில் வரும் 30-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் புதிய நெறிமுறைகளில் ஒன்றான முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளின் வீடுகளுக்கு சென்று வாக்குப்பதிவு செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தெலங்கானாவில் பல்வேறு இடங்களில், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிடம் தேர்தல் அலுவலர்கள் வீடுகளுக்குச் சென்று வாக்குப்பதிவு பெற்றனர். வரும் 29-ஆம் தேதி வரை, இதுபோன்று வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்