பாஜக தோல்வி - விளாசி எடுத்த சு.வெங்கடேசன்

Update: 2024-07-14 15:59 GMT

பத்ரிநாத் தொகுதியில் பாஜக தோல்வி அடைந்ததன் மூலம் ராமபிரானின் அனைத்து திருத்தலங்களிலும் பாஜக தோல்வி அடைந்துவிட்டதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ராமபிரானின் தேவபூமியான பத்ரிநாத் சட்டசபை இடைத்தேர்லில் பாஜக தோல்வி அடைந்திருப்பதாகவும், ஏற்கனவே மக்களை தேர்தலில்

அயோத்தி, பிரயாக் ராஜ், ராமநாதபுரம், நாசிக், ராம்டெக், சித்ர கூட் போன்ற ராமர் வாழ்ந்ததாக கூறப்படும் தொகுதிகளில் பாஜக தோல்வி அடைந்த நிலையில், நேற்று தேவபூமியான பத்ரிநாத்திலும் தோல்வியடைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் ராமபிரானின் திருத்தலங்கள் அனைத்திலும் பாஜக தோல்வி அடைந்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், தீமைகள் வீழ்த்தப்படுவதே ராமர் கதையின் நியதி எனவும் குறிப்பிட்டுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்