சிங்கப்பூர், புருனேவில் 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பி உள்ள பிரதமர் மோடி, குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் இன்று காணொலி காட்சி மூலம் பங்கேற்று உரையாற்றுகிறார். மத்திய அரசும், குஜராத் அரசும் இணைந்து, நீர் சேகரிப்பு - மக்கள் பங்கேற்பு" முயற்சியைத் தொடங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் சுமார் 24 ஆயிரத்து 800 மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் பங்களிப்புடன் கட்டப்பட்டு வருகின்றன. இந்த நீர் செறிவூட்டும் கட்டமைப்புகள் மழைநீர் சேகரிப்பை மேம்படுத்தவும், நீண்டகால நீர் நிலைத்தன்மையை உறுதி செய்யும் கருவியாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.