"அருவருப்பு.. மோசம்.. குண்டர் சட்டத்துல போடுங்க" - பாஜக பிரபலம் குருஜியை பார்த்து கடுகடுத்த நீதிபதி

Update: 2024-07-02 03:19 GMT

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த அகமத் பயாஸ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், நம்புதலையைச் சேர்ந்த பாஜக நிர்வாகி குருஜி, இந்து - முஸ்லீம்கள் இடையே பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாக முகநூல் பதிவுகளை வெளியிட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இது இஸ்லாமியர்களை காயப்படுத்தும் வகையில் இருப்பதுடன், மத கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக அவர் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தொண்டி காவல் நிலையத்தில் ஜூன் 14ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது என்றும், ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, குருஜியின் முகநூல் பதிவுகள் அருவருக்கத்தக்க வகையிலும், மோசமாகவும் இருப்பதாக தெரிவித்தார். இது போன்ற குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதி, ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இந்த வழக்கு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை வரும் 3-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்