வால்மீகி திட்ட ஊழல்,நேருக்கு நேர் மோதிய காங்., பாஜக.. மாநிலங்களவையில் பரபரப்பு

Update: 2024-07-26 12:12 GMT

கர்நாடகாவில் வால்மீகி திட்ட ஊழல், முடா ஊழல் குற்றச்சாட்டுகளால் அரசியல் பரபரக்கிறது. இந்த ஊழல் விவகாரங்கள் குறித்து, மாநிலங்களவையில் விவாதம் நடத்த வேண்டும் என பாஜக எம்.பி.க்கள் ஒத்திவைப்பு நோட்டீஸ் விடுத்தனர். நோட்டீஸ்களை ஏற்க முடியாது என அவைத்தலைவர் ஜெகதீப் தங்கர் நிராகரித்தார். ஆனால் பாஜக எம்.பி. இரானா கடாடி, பூஜ்ஜிய நேரத்தில் வால்மீகி பழங்குடியினர் மேம்பாட்டு கழக ஊழல் குறித்து பேசினார். 187 கோடி ரூபாயை சுருட்டிய காங்கிரஸ் அரசு, அதை நாடாளுமன்றத் தேர்தலுக்கு பயன்படுத்தியிருக்கிறது என குற்றம் சாட்டினார். ஒத்திவைப்பு நோட்டீசை அவைத்தலைவர் நிராகரித்த போதும், பூஜ்ய நேரத்தில் பேசுவதற்கு அவர் பேசிய விவகாரம் பட்டியலில் இடம்பெறாத போதும், அவர் பேச அனுமதிக்கப்பட்டது எப்படி? என ஆட்சேபம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்