நாடாளுமன்றத் சபாநாயகர் தேர்தலுக்கு இந்தியா கூட்டணி வேட்பாளரை நிறுத்தியதை விமர்சித்த, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், சபாநாயகரை ஒருமனதாக தேர்வு செய்வதே நல்ல பாரம்பரியம் என்றார். சபாநாயகர் என்பவர் ஆளும் கட்சியையும், எதிர்க்கட்சியும் சாராதவர், அவர் ஒட்டுமொத்த அவைக்கும் சொந்தமானவர் என்றார். குறிப்பிட்ட நபர் அல்லது குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவரை துணை சபாநாயகராக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் நிர்பந்திப்பது அரசியல் பாரம்பரியத்திற்கு பொருத்தமானதல்ல எனவும் விமர்சித்தார். சபாநாயகர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தியிருப்பது அதிருப்தி அளிக்கிறது என குறிப்பிட்ட மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, சபாநாயகர் பதவிக்கு ஆதரவளிக்க துணை சபாநாயகர் பதவி என்ற கிவ் அண்ட் டேக் பாலிசி சரியானது இல்லை என்றார். எதிர்க்கட்சிகள் தங்கள் வேட்பாளரை வாபஸ் பெற வேண்டும் எனவும் பாஜக தரப்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது