``பிரதமர் பதவி ஒத்துவராது; எமர்ஜென்சி மூலம் அதிபர் ஆட்சிக்கு திட்டம்..'' - அண்ணாமலை அதிரடி

Update: 2024-06-25 15:16 GMT

எமர்ஜென்சி காலத்தில் இந்தியாவில் அதிபர் ஆட்சி முறையை கொண்டுவர திட்டமிட்டவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பாஜக சார்பில் எமர்ஜென்சி குறித்த கருத்தரங்கம், சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை, எமர்ஜென்சி காலத்தில், இந்தியாவில் அதிபர் ஆட்சி முறையை கொண்டுவர இந்திரா காந்தி திட்டமிட்டார் என்றும், அரசியலமைப்பு சட்டத்தை பற்றி பேச தகுதி இல்லாத கட்சி காங்கிரஸ் என்றும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்