`டாப் 10'.. பாஜகவை கிடுகிடுக்க வைக்கும் திட்டங்கள்

Update: 2024-05-12 15:28 GMT

மக்களவைத் தேர்தலுக்காக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பத்து உத்தரவாதங்களை அளித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கைது காரணமாக தனது உத்தரவாதங்கள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறினார். நாடு முழுவதும் முதல் 200 யூனிட் இலவச மின்சாரம்... இலவச கல்வி வழங்கி, தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளை சிறந்ததாக மாற்றுவதாகவும் வாக்குறுதி அளித்தார். தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக, அரசு மருத்துவமனைகளில் வசதிகள் உருவாக்கப்படும் என்ற கெஜ்ரிவால், சீனாவிடம் இருந்து இந்தியாவின் நிலம் மீட்கப்படும் என்றார். அக்னிவீர் திட்டம் கைவிடப்படும் என்றும், விவசாயிகளுக்கு முழு ஆதரவு விலை கிடைக்கும் என்றும் தெரிவித்த அவர், டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து உறுதி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஊழலில் இருந்து நாட்டை விடுவிப்போம் என்றும், ஜிஎஸ்டியை எளிதாக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்தார். இந்த உத்தரவாதங்கள் குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் விவாதிக்கவில்லை என்ற அவர், இவற்றால் யாருக்கும் எந்த பிரச்சினையும் ஏற்படாது என்றார். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த‌தும், இந்த 10 உத்தரவாதங்களும் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதாகவும் கெஜ்ரிவால் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்