தொடரும் பாஜகவினர் கைது..!"நட்டாவின் நால்வர் குழு இன்று வருகை" டெல்லிக்கு பறக்க போகும் ரிப்போர்ட்

Update: 2023-10-27 05:34 GMT

தமிழகத்தில் பாஜக நிர்வாகிகள் கைது தொடர்பாக ஆய்வு செய்ய, முன்னாள் மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா தலைமையில் 4 பேர் கொண்ட பாஜக உயர்மட்டக் குழு இன்று தமிழகம் வருகிறது.

தமிழ்நாட்டில் பாஜகவினர் முறையான காரணங்களுக்காக கைது செய்யப்படுகிறார்களா? அல்லது அரசியல் பழி வாங்கும் நோக்கில் கைது செய்யப்படுகிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா 4 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்திருந்தார். அதில், முன்னாள் மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா, முன்னாள் மும்பை காவல் ஆணையர் சத்யபால் சிங், ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் புரந்தேஸ்வரி, பி.சி.மோகன் எம்.பி. ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளன. அந்த குழு இன்று வெள்ளிக்கிழமை தமிழகம் வருகிறது.

முதலில் அண்ணாமலை வீட்டின் முன்பு அமைக்கப்பட்ட கொடிக்கம்ப விவகாரத்தில் கைதான பாஜகவினரை இந்த குழு சந்திக்கிறது. இதையடுத்து, நாளை காலை பாஜக தலைவர் அண்ணாமலை உடன் ஆலோசனை நடத்துகின்றனர். தமிழ்நாடு முழுவதும் திமுக நிர்வாகிகளின் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றிய அறிக்கையை தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை செயலாளரிடம் அந்த குழு வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்