பாஜகவின் 7 தீர்மானங்கள்...சென்னையில் முழங்கிய அண்ணாமலை

Update: 2024-07-06 15:27 GMT

சென்னையில் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருவேற்காடு ஸ்ரீவாரி கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கலந்துக்கொண்டார்.

மத்திய இணையமைச்சர் எல். முருகன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பிரதமர் மோடி 3 ஆவது முறையாக பிரதமர் ஆனதற்கும், தமிழகத்தை சேர்ந்த எல். முருகனுக்கு மத்திய இணையமைச்சர் பொறுப்பு வழங்கியதற்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும், முல்லைப் பெரியாற்றில் கேரளாவும், காவிரியில் மேகதாது அணையை கட்ட கர்நாடகாவும் முயற்சிப்பதில் தமிழக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரியும், போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் காவல்துறையின் பாரபட்ச நடவடிக்கையை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் செங்கோலை அவமானப்படுத்தியவர்களை கண்டனம் தெரிவித்தும், ஜாதிய மோதல்களை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு சார்பாக முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்