ராமேஸ்வரம் மீனவர்கள் கைதுக்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், எக்ஸ் தளத்தில் தனது கண்டனங்களை பதிவிட்டுள்ளார். 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீன்பிடி தடைகாலம் முடிந்து, ஜூன் 16ம் தேதிதான் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றதாகவும், 7 கட்டங்களாக 89 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். மீனவர்களை ஒரு மாதத்திற்கு மேல் சிறையில் வைத்துள்ள நிலையில், 10 பேர் மீது கொலை வழக்கு பதிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மீனவர்கள் விவகாரத்தில், தமிழக அரசு, மத்திய அரசுடன் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வரும்படியும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.