ஜம்மு காஷ்மீரில் யாத்திரிகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் வேதனையளிப்பதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும், சம்பவம் குறித்து துணை நிலை ஆளுனர் மற்றும் டிஜிபி ஆகியோரிடம் பேசி விவரங்களை கேட்டறிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் நிச்சயம் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப மாட்டார்கள் என தெரிவித்துள்ள அவர், படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தான் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.