ஜாமின் கிடைத்தும் `நோ' யூஸ்.. சிறை நோக்கி பறந்தார் அமர் பிரசாத்

Update: 2023-11-05 16:19 GMT

என் மண் என் மக்கள் யாத்திரை தொடர்பான வழக்கில், அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டி புழல் சிறையில் இருந்து பேருந்தில் அழைத்து செல்லப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. ஆனால், பாஜக கொடி கம்பம் அகற்றிய விவகாரத்தில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதம் செய்து ஜேசிபி இயந்திரத்தை சேதப்படுத்திய வழக்கில் செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்திருந்தது. இந்நிலையில் அமர் பிரசாத் ரெட்டி மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்