அதிமுக நிர்வாகி வீட்டில் திடீர் சோதனை - "இந்த ஒரு காரணத்திற்காகவே சோதனை"

Update: 2023-09-14 11:11 GMT

லஞ்ச ஒழிப்பு சோதனை பழிவாங்கும் நடவடிக்கை என, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள வடசென்னை வடகிழக்கு மாவட்டச்செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் இல்லத்தில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று 10 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை செய்தனர். இந்நிலையில், ஆர்.எஸ். ராஜேஷை அவரது இல்லத்தில் சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எப்போது சட்டமன்றத் தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க வெற்றி பெற்றுவிடும் என்பதாலேயே, இது போன்ற சோதனைகள் நடைபெறுவதாகத் தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்