கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியில் அதிமுக பிரமுகர் புஷ்பநாதன் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.