``எங்களுக்கு MPக்களை தராமல்... தமிழக மக்கள் செய்த தவறால்..'' பிரேமலதா காட்டமான பேச்சு
தமிழகத்தில் மின்கட்டண உயர்வை எதிர்த்து, திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று, கண்டன கோஷங்களை எழுப்பினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பட்ஜெட் என்பது இந்தியா முழுமைக்கானது என்றும், மத்திய அரசின் பட்ஜெட் தமிழ்நாட்டிற்கும் பொருந்தும் என்றும் தெரிவித்தார். மேலும் தமிழக மக்கள் மூன்றாவது முறையாக தவறு செய்ததால், தமிழகத்திற்கு எந்த சலுகையும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.