சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் திருப்பூர் மற்றும் கடலூர் மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இறுதியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவுடன் கூட்டணி இல்லாமலேயே வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்கலாம் என நிர்வாகிகளிடம் தெரிவித்தார். மேலும் அடுத்த 2 ஆண்டுகள் கடுமையாக உழைக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்திய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் சரியாக பணியாற்றாத நிர்வாகிகள் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவார்கள் என எச்சரித்துள்ளார்.