"பொய் வழக்கில் திட்டமிட்டு கைது.." பொங்கி எழுந்த எடப்பாடி | Edappadi K. Palaniswami | ADMK
செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதை மறைக்க, பொய் வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். நில மோசடி வழக்கில் கைதாகி அண்மையில் ஜாமினில் விடுவிக்கப்பட்ட, முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை, கரூரில் உள்ள அவரது இல்லத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்திது பேசினார். அப்போது, முன்னாள் அமைச்சர்கள் உட்பட ஏராளமானோர் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, புகாருக்குள்ளான நிலத்திற்கும் விஜயபாஸ்கருக்கும் சம்பந்தம் இல்லை என்றார்.