அரசு அதிகாரி வீட்டில் அதிரடி ரெய்டு.. அள்ள அள்ள வந்த பணம், தங்கம்?...

Update: 2022-07-27 04:43 GMT

அரியலூரில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையில் நகர் ஊரமைப்பு துறை உதவி இயக்குநர் வீட்டில் இருந்து ஒன்றேகால் கிலோ தங்கம் மற்றும் பலகோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கின.பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கூத்தூரை சேர்ந்த தன்ராஜ் என்பவர் புதுக்கோட்டை நகர் ஊரமைப்பு துறை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் என கிடைத்த தகவலின் பேரில் தன்ராஜ் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். 12 மணி நேரமாக நடைபெற்ற இந்த சோதனையின் போது தன்ராஜ் வீட்டில் இருந்து ஒன்றே கால் கிலோ தங்கம், 8 கிலோ வெள்ளி, 8 லட்சம் ரூபாய் பணம் மற்றும் பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும் தன்ராஜ் வீட்டின் மேல் இருந்த கலசம் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்