4,800 கோடி டெண்டர் முறைகேடு புகார் - செப். 18-ல் விசாரணை

Update: 2023-09-15 11:06 GMT

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு புகார் வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வருகிற 18ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டப்பட்டது. புகார் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்கக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம், தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு துறை உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் மேல்முறையீடு செய்தது. இந்நிலையில், மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா எம். திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு வருகிற 18ம் தேதி விசாரிக்கவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்