குஜராத்தில் ரூ.22,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் - துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

குஜராத்தில் 22ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நல திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

Update: 2022-04-20 19:18 GMT
குஜராத்தில் 22ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நல திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 

தாஹோத் மற்றும் பஞ்ச்மஹாலில் நடைபெற்ற நலத்திட்டங்கள் தொடக்க விழாவில் குஜராத் முதலமைச்சர்  பூபேந்திர பாய் பட்டேல், மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பழங்குடியின மக்களின் ஆசிகள் நாட்டுக்கு சேவை செய்ய ஊக்க சக்தியாக உள்ளது என்றார். 9 ஆயிரம் குதிரை திறன் கொண்ட மின்சார எஞ்சின்களின் உற்பத்திக்கு அடிக்கல் நாட்டப்பட்டு இருப்பதை குறிப்பிட்ட அவர்,  ஒரே ஒரு அறிவியல் பள்ளிக்கூடங்கள் கூட இல்லாத தாஹோத் பகுதி வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தார். மாணவர்கள் வெளிநாடு சென்று படிப்பதாகவும், பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.  

Tags:    

மேலும் செய்திகள்