தொடர் தோல்வி... சரிந்து வரும் செல்வாக்கு... மீண்டும் புத்துணர்வு பெறுமா காங்கிரஸ்?

தொடர் தோல்வி... சரிந்து வரும் செல்வாக்கு... என அடிமேல் அடி விழுந்ததால் காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தி தலைவர்கள் பலரும் விமர்சனங்களை எழுப்பி வருகிறார்கள். இதனால் கட்சிக்குள் சலசலப்பு நீடிக்கிறது.

Update: 2022-03-19 02:45 GMT
தொடர் தோல்வி... சரிந்து வரும் செல்வாக்கு... என அடிமேல் அடி விழுந்ததால் காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தி தலைவர்கள் பலரும் விமர்சனங்களை எழுப்பி வருகிறார்கள். இதனால் கட்சிக்குள் சலசலப்பு நீடிக்கிறது. நேரு குடும்பத்தை சேராதவர்கள் கட்சியை வழிநடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் கருத்து தெரிவிக்க... சர்ச்சை பூதாகரமாக வெடித்தது. அதோடு, 2014 ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை சந்தித்த 49 சட்டப்பேரவை தேர்தலில் 39ல் காங்கிரஸ் தோல்வியுற்றதாகவும், நான்கில் மட்டும் வெற்றி பெற்றுள்ளதாகவும் சுட்டிக் காட்டினார், கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான மனீஷ் திவாரி. தேர்தல் தோல்வி குறித்து, குலாம் நபி ஆசாத்தின் வீட்டில் வைத்து நடைபெற்ற ஜி-23 என அழைக்கப்படும் அதிருப்தி காங்கிரஸ் தலைவர்களின் கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இது போன்ற தொடர் கூட்டங்கள் மூலம் காங்கிரஸ் கட்சியில் பெரும் மாற்றங்களும் அதிரடி நடவடிக்கைகளும் இருக்குமா என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அதையெல்லாம் மறக்கடிக்கச் செய்திருக்கிறது மாநிலங்களவை எம்.பி பதவிகள். தொடர் தோல்வியால் சட்டமன்ற உறுப்பினர்களின் பலம் குறைந்ததன் காரணமாக, மாநிலங்களவை எம்பி சீட்களையும் ஒவ்வொன்றாக இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது, அந்தக் கட்சி. பஞ்சாப்பில் ஆட்சியை பறிகொடுத்ததால், இந்த ஆண்டுடன் நிறைவு பெறும் இரண்டு காங்கிரஸ் எம்பிக்களின் சீட்டை தக்க வைக்க முடியாத நிலை..ஹிமாச்சலில் பாஜக ஆட்சி நடந்து வருவதால் அங்கும் ராஜ்யசபா துணை தலைவரான ஆனந்த் சர்மாவின் பதவி காலம் முடிந்ததும்... எம்பி சீட் பறிபோகும் சூழல்.. கர்நாடகாவிலும் ஆட்சியில் இல்லாததால் ஒரு எம்பி சீட்டை இழக்கவுள்ளது, காங்கிரஸ். தற்போது காங்கிரஸ் வசம் எஞ்சியிருப்பது கேரளாவில் உள்ள ஒரு மாநிலங்களவை எம்பி சீட்டும், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் அடுத்த மாதம் காலியாகும் இரண்டு எம்பி சீட்டுகளும் தான். இந்தப் பதவிகளில் இருந்த மூத்த தலைவர்களுக்கு பதிலாக யாரை வேட்பாளராக நிறுத்துவது என குழப்பத்தில் உள்ளது, காங்கிரஸ் மேலிடம்.

Tags:    

மேலும் செய்திகள்