நடிகர் ரஜினி உடல்நிலை குறித்து வெளியான செய்தி.. அண்ணாமலை X தளத்தில் உருக்கமாக பதிவு | Rajini

Update: 2024-10-01 15:08 GMT

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டி மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ரஜினிகாந்த் விரைவில் பூரண உடல்நலம் பெற்று மீண்டுவர இறைவனை பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக அளவில் பொதுமக்களின் பேரன்பைப் பெற்றிருக்கும் ரஜினிகாந்த், விரைந்து நலம் பெற்று, தனது கலைப் பணிகள் தொடர, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்