உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் வாக்குப்பதிவு

உத்தரப்பிரதேசத்தில் 6ஆம் கட்ட தேர்தல் - முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் வாக்குப்பதிவு

Update: 2022-03-03 02:32 GMT
உத்தரபிரதேசத்தில் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு துவக்கம்.


உத்திரபிரதேசத்தில் 10 மாவட்டங்களில் உள்ள 57 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று ஆறாம் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

கோரக்பூர்,குஷி நகர், அம்பேத்கர் நகர், பல்ராம்பூர், சித்தார்த் நகர்,பஸ்தி,மஹாராஜ்கஞ்ச் உள்ளிட்ட 10 மாவட்டங்கள் இதில் அடங்கும்.



காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.


இன்றைய தேர்தலில் மொத்தம் 676 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மொத்தம் 13,930 வாக்குப்பதிவு மையங்களில் 25,319 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஏறத்தாழ 2.14 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.


உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் நகர்புற தொகுதியிலும், உத்திரப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் லல்லு தம்குஹிராஜ் தொகுதியிலும் இன்றைய தேர்தலில் வாக்குப்பதிவு எதிர்நோக்கியுள்ளனர்.


இவர்கள் தவிர சமாஜ்வாதி கட்சியின் சுவாமி பிரசாத் மவுரியா, சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவருமான ராம் கோவிந்த் ,உத்தரபிரதேச அமைச்சர் சூர்ய பிரதாப் சாஹி, சதீஷ் சந்திர திவிவேதி உள்ளிட்ட பலர் இன்றைய தேர்தல் களத்தில் உள்ளனர்.



கடந்த 2017 ம் ஆண்டு இந்த தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள மூன்று தொகுதிகளில் பாரதிய ஜனதா 46 தொகுதிகளையும் அதன் கூட்டணி கட்சியான அப்னா தள் 1 இடத்திலும், சமாஜ்வாதி இரண்டு இடங்களிலும், பகுஜன் சமாஜ் 5 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்