பாஜக, ஆர்.எஸ்.எஸ். மீது திருமாவளவன் பகிரங்க குற்றச்சாட்டு
ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக, இந்தியர்களை மதத்தின் பெயராலும், இந்துக்களை சாதியின் பெயராலும் பிரிப்பதாக திருமாவளவன் எம்.பி. குற்றம்சாட்டி உள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக, இந்தியர்களை மதத்தின் பெயராலும், இந்துக்களை சாதியின் பெயராலும் பிரிப்பதாக திருமாவளவன் எம்.பி. குற்றம்சாட்டி உள்ளார்.
புதுச்சேரியில் கம்பன் கழக அரகில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், கூட்டாட்சிக் கோட்பாடும், நாடாளுமன்ற சனநாயகமும் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில், தலைமையேற்று பேசிய திருமாவளவன் எம்.பி, மத மாற்றத்தை தடுத்து, காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை நீர்த்து போக செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆர்.எஸ்.எஸ். பாஜக வெறுப்பு அரசியல் செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.
இதற்காக தலித் மற்றும் பழங்குடியின மக்களுடன் நெருங்குவதாக கூறிய அவர், இந்தியர்களை மதத்தின் பெயராலும், இந்துக்களை சாதியின் பெயராலும் பிரித்து, தலித் சேர்த்து, சிறுபான்மையினரை வெறுக்கும் அரசியலை விதைப்பதாக குற்றம்சாட்டினார். பாஜகவின் கனவுத் திட்டம், இந்தியாவை ஒரே தேசம், ஒரே கலாசாரம் என்பதுதான் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.