மாநிலங்களவை மார்ச் 14ம் தேதி வரை ஒத்திவைப்பு

பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பாகம் நிறைவு பெற்றதை தொடர்ந்து மாநிலங்களவை மார்ச் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Update: 2022-02-11 10:23 GMT
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பாகம் நிறைவு பெற்றதை தொடர்ந்து  மாநிலங்களவை மார்ச் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. இன்று மாநிலங்களவை கூடியதும் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து  நிதி அமைசர் நிர்மலா சீதாரமன் பேசினார். அதையடுத்து பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாகம் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், மாநிலங்களவையின் அடுத்த கூட்டத்தை மார்ச் 14ம் தேதி வரை ஒத்தி வைப்பதாக துணை சபாநாயகர்  அறிவித்தார்.  அன்றைய தினம் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது பாகம் தொடங்கும் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்