இடைத்தேர்தலில் ம‌ம்தா பானர்ஜி வெற்றி - பவானிபூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டி

பவானிபூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி 58 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதலமைச்சர் பதவியை தக்க வைத்துக்கொண்டார்.

Update: 2021-10-03 11:31 GMT
பவானிபூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி 58 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதலமைச்சர் பதவியை தக்க வைத்துக்கொண்டார்.மேற்குவங்க மாநிலம் பவானிபூர் தொகுதி
இடைத்தேர்தலில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிட்டார்.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பா.ஜ.க வேட்பாளரை விட சுமார் 700 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி முன்னணியில் இருந்தார்.மொத்தமுள்ள 21 சுற்றுகள் முடிவில் பாரதிய ஜனதா வேட்பாளர் பிரியங்கா டிப்ரிவாலை விட 58 ஆயிரத்து 389 வாக்குகள் வித்தியாசத்தில் ம‌ம்தா பானர்ஜி வெற்றி பெற்றார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரியங்கா டிப்ரேவால் 26 ஆயிரத்து 320 வாக்குகள் பெற்று 2வது இடமும், மார்க்சிஸ்ட் வேட்பாளர்  4 ஆயிரத்து 220 வாக்குகள் பெற்றார் 3ஆம் இடமும் பிடித்தனர்.இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்தது.



Tags:    

மேலும் செய்திகள்