ஆந்திர ஊரக உள்ளாட்சித் தேர்தல் - ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங். அமோக வெற்றி
ஆந்திராவில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று உள்ளது.
ஆந்திர பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் விதிமுறைப்படி நடக்கவில்லை எனக் கூறி தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்தன. இதனால், வாக்கு எண்ணிக்கைக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதனிடையே, வாக்கு எண்ணிக்கைக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அதில், 5 ஆயிரத்து 998 மண்டலங்களிலும், 502 ஜில்லாக்களிலும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம், 826 மண்டலங்களிலும், 6 ஜில்லாக்களிலும் வெற்றி கண்டது. தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவான இடங்களிலும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்று, ஆந்திராவில் தனது செல்வாக்கை அதிகரித்து உள்ளது.