"பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்" - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் வேண்டுகோள்

ஒரு நபர் கொரோனா நோய்க்கு ஆளானாலும், அது அவர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மிகப்பெரிய இழப்பு என, மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-11-30 13:02 GMT
ஒரு நபர் கொரோனா நோய்க்கு ஆளானாலும், அது அவர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மிகப்பெரிய இழப்பு என, மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். பழைய டெல்லி ரயில் நிலையத்தில் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், பொதுமக்களுக்கு முக கவசங்கள் மற்றும், சோப்புகளை விநியோகித்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், கோவிட்டுக்கு எதிரான போராட்டத்தில், முக கவசம் மற்றும் சானிடைசர் மிகப்பெரிய ஆயுதம் என கூறியுள்ளார். கோவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்