"பிரதமரே... நீங்கள் உண்மையை சொல்ல வேண்டும்" - பிரதமர் நரேந்திர மோடிக்கு, ராகுல்காந்தி யோசனை

இந்தியா, சீனா இடையிலான எல்லைப் பிரச்சனையில், சீனா, இந்திய எல்லையை ஆக்கிரமித்து இருந்தால், அதனை தைரியமாக மக்களிடம் தெரியப்படுத்துங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, ராகுல்காந்தி யோசனை தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-26 12:48 GMT
இந்தியா, சீனா இடையிலான எல்லைப் பிரச்சனையில், சீனா, இந்திய எல்லையை ஆக்கிரமித்து இருந்தால், அதனை தைரியமாக மக்களிடம் தெரியப்படுத்துங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, ராகுல்காந்தி யோசனை தெரிவித்துள்ளார். நீங்கள் மக்களிடம் உண்மையை சொல்லாதவரை பயனில்லை என்றும் சீனா மீது நடவடிக்கை எடுக்கவும், நமது எல்லையை பாதுகாக்கும் நடவடிக்கையிலும்,  நாடு முழுவதும் உங்களுடனும், ராணுவத்துடனும் தோளோடு தோள்  நிற்கிறது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். நாட்டுக்காக உயிர்தியாகம் செய்த துணிச்சலான தியாகிகளுக்கு வணக்கம் செலுத்துகிறேன் என்றும் தெரிவித்துள்ள ராகுல்காந்தி, ஆயுதங்கள் இல்லாமல் தியாகம் செய்த எங்கள் வீரர்களை எல்லைக்கு யார் அனுப்பியது, ஏன்? என நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி விளக்க வேண்டும் என ராகுல் காந்தி கோரியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்