"பெட்ரோல், டீசல் விலையை 35-40 % குறைக்க வேண்டும்" - மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை 3 ரூபாய் உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை 3 ரூபாய் உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அரசுக்கு கூடுதலாக 39 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 32 டாலராக குறைந்துள்ள நிலையில், அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிக்காமல், மத்திய அரசு கலால் வரியை உயர்த்தி உள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. தற்போதைய நிலையில் பெட்ரோல், டீசல் விலையை 35 முதல் 40 சதவீதம் அளவுக்கு மத்திய அரசு குறைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.