"பழைய கதைகளை பேசும் உறுப்பினர்களால் அதிருப்தி" - மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு
குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தேர்ந்தெடுத்துள்ள பாதை துரதிர்ஷ்டவசமானது என மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்கு நன்றி தெரிவித்து பிரதமர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் தவறான தகவலைக் கொடுத்து எதிர்கட்சிகள், தேசத்தை தவறாக வழி நடத்துவது சரியா என அவர் கேள்வி எழுப்பினார். மேலும், சில மாநிலங்களவை உறுப்பினர்களின் கருத்துக்கள் தமக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் அவர்கள் தொடர்ந்து கடந்த காலத்தின் அதே பழைய கதைகளை பேசி வருவதாகவும் அப்போது அவர் குற்றம் சாட்டினார்.