திமுகவினர் கைது - ஸ்டாலின் கண்டனம்

"எஸ்.பி.வேலுமணியை விமர்சித்தால் கைதா?"

Update: 2020-01-27 18:36 GMT
அமைச்சர் வேலுமணியை விமர்சித்ததற்காக திமுகவினர் கைது செய்யப்படுவது தொடர்ந்தால், தாமே கோவைக்கு சென்று மக்களை திரட்டி, போராட்டத்தில் ஈடுபட போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசூர் கிராம சபை கூட்டத்தில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குறித்து பேசியதற்காக திமுக நிர்வாகி ஏ.வி.முத்துலிங்கம் கைது செய்யப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். கிராம சபை கூட்டம் என்பது கருத்துக்கேட்கும் கூட்டம் என்றும், அதில் கூறப்படும் கருத்தின் நியாயத்தை உணர்ந்து தீர்வு காண்பதே உள்ளாட்சி துறை அமைச்சரின் பணி என்றும் ஸ்டாலின் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால், அண்மை காலமாக உள்ளாட்சி துறை அமைச்சரை விமர்சிப்பவர்கள் மீது கைது நடவடிக்கை பாய்வதாக குற்றம் சாட்டியுள்ள ஸ்டாலின், இனியும் திமுகவினர் கைது செய்யப்பட்டால் தாமே கோவைக்கு சென்று போராட்டம் நடத்த போவதாக எச்சரித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்