"வரலாற்றில் முக்கிய விஷயங்கள் விடுபட்டிருப்பது வருத்தமளிக்கிறது" - பிரதமர் மோடி பேச்சு

ஆங்கிலேயர் ஆட்சியின்போது எழுதப்பட்ட இந்திய வரலாற்றில் பல முக்கிய விஷயங்கள் விடுபட்டிருப்பது வருத்தமளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2020-01-12 02:36 GMT
கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவு மண்டபம். கரன்சி கட்டடம் உள்ளிட்ட புதுப்பிக்கப்பட்ட பாரம்பரிய கட்டடங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார். பின்னர் உரையாற்றிய அவர், இந்தியாவுக்கு வெளியே இருந்து வந்தவர்கள் ஆட்சியை எப்படி கைப்பற்ற முயன்றார்கள்? ஆட்சி அதிகாரப் போட்டியில் தந்தையை மகன்கள் எப்படி கொன்றார்கள்? சகோதரர்கள் அரியணைக்காக ஒருவருக்கொருவர் எப்படி சண்டையிட்டார்கள்? என்பதை பற்றி மட்டுமே இந்திய வரலாறு பேசுகிறது என்றார். மாணவர்கள், தேர்வுக்காக படிக்கும் வரலாறு அல்ல, இந்திய வரலாறு  என 1903ஆம் ஆண்டில் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் எழுதி இருப்பதாக பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்