"கல்வி துறையில் தனியார் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும்" - குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு பேச்சு
கல்வி துறையில் தனியார் துறையினர் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும் என்று குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
திருச்சியில் உள்ள தேசிய கல்லூரியின் நூற்றாண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், உயர்கல்வி மாணவர்கள் சேர்க்கையில் 46.9 சதவீதம் பெற்று தமிழகம், நாட்டிலேயே முதலிடம் வகிப்பதாக தெரிவித்தார். இந்தியாவில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம், போன்ற மிகச்சிறந்த கல்வி நிறுவனங்கள் உள்ளதாக அவர் கூறினார். ஆனாலும் உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்தியப் பல்கலைக்கழகம் ஒன்று கூட இடம் பெறவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் வெங்கைய்யா நாயுடு தெரிவித்தார்.